பலியாடுகள் இடையே போட்டி; யார் சத்திரியர் – வன்னியர்களா?நாடார்களா?

தமிழகத்தில் பிஜேபி தனக்கான ஆதரவு தளத்தை சாதியரீதியாக கட்டமைத்து வருகிறது. தமிழக சாதிகளை தனித்தனியாகப் பிரித்து, அந்த சாதிகளை தங்களுக்கான புராதான பெருமைகளைத் தேட வைக்கிறது இந்துத்துவம்.  அந்த தேடலில், ஏற்கனவே பார்ப்பனியம் இட்டுக்கட்டி வைத்திருக்கும் புராணங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றன சாதிகள். அந்த வகையில், இந்துத்துவ பிஜேபியின் வலையில் சிக்கியிருக்கும் சாதிகளில் வன்னியரும் நாடாரும் முக்கியமான சாதிகள். இந்த இரண்டு சாதிகளுக்கு இடையில் ‘யார் சத்திரியர்கள் ?’ என்பதில் நீண்ட காலமாக போட்டி நடந்து வருகிறது. கடந்த […]

மேலும் படிக்க . . .

மராட்டிய தலித் கவிஞர் அர்ஜுன் டாங்கிளே உடன் ஒர் உரையாடல்

அர்ஜுன் டாங்களே (பி.1945) மகாராஷ்டிராவின் தலித் இலக்கியச் செயல்பாடு, சமூக-கலாச்சார இயக்கம் மற்றும் அரசியலில் குறிப்பிடத்தக்க பெயர். தலித் பாந்தர்ஸ் (1972-) என்ற போர்க்குணமிக்க தலித் இளைஞர் அமைப்பின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவர் டாங்கிளே. அவர் பாரதீய குடியரசுக் கட்சியின் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தார். இப்போது (2014) அவர் குடியரசு ஜன சக்தியின் தலைவராக உள்ளார். சமூக-கலாச்சார இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டாங்கிளே  பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள், கட்டுரைகள் மற்றும் […]

மேலும் படிக்க . . .

காங்கிரஸின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்திதான் பொறுப்பா ? பீகாரில் இருந்து ஒரு பதில் !

காங்கிரஸின் அவலநிலைக்கு ராகுல் காந்தியைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது. காங்கிரஸின் வீழ்ச்சி 1980-களில் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி அரசியல் களத்திற்கே வராத 1990-களின் முற்பகுதியிலேயே, காங்கிரசின் வீழ்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.  பழமைவாய்ந்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸின் அவலநிலையை, பொதுவாக இந்தி பேசும் மையப்பகுதியில், அதிலும் குறிப்பாக பீகாரின் சமீபத்திய வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்தால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 முக்கியத் […]

மேலும் படிக்க . . .

கருவாடு மீன் ஆகுமா ? சசிகலா ஆடியோவும் அதிமுக அரசியலும்

சமீபத்தில், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக அழிவதை பார்த்து சசிகலா வருந்துவதாகவும், அதிமுகவை காப்பாற்ற தான் அரசியலுக்கு விரைவில் வரயிருப்பதாகவும் அந்த ஆடியோ பேச்சுகளின் மையக்கருத்து உள்ளது. சசிகலாவை விலக்கிவைத்து விட்டு, அதிமுகவை சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு, இந்த ஆடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுதியிருக்கிறது. அவர்களில் சிலர் இந்த ஆடியோக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து, இந்த விவகாரத்தை […]

மேலும் படிக்க . . .

சர்ச்சைக்குரிய நீதிபதி அருண் மிஸ்ரா- மனித உரிமை ஆணைய புதிய தலைவர்

மோடியைப் புகழ்ந்த சர்ச்சைக்குரிய நீதிபதி இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலைவர்  ஆகியுள்ளர். நீதிபதி அருண் மிஸ்ரா 2020-இல் உச்சநீதிமன்றத்தில் பதவியில் இருந்தபோது, ஒரு சர்வதேச மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை, ‘இந்தியாவிற்குள் செயல்பட்டாலும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற, உலகளவிய சிந்தனைக் கொண்ட தொலைநோக்கு பார்வையாளர்’, என்று புகழ்ந்தவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ராவை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்த, 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவில், எதிர்க்கட்சி […]

மேலும் படிக்க . . .

ஏழுவர் விடுதலை விவகாரம் கடந்து வந்த பாதை…

தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் வாழம் 7 பேரை விடுதலைச் செய்வதற்கு, சட்டபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். அதை தொடர்ந்து தமிழக அரசும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த 7 […]

மேலும் படிக்க . . .

பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பழங்கதையும் – படிப்பினைகளும்

டெல்லியில் நடைபெறும் விவசாயப் போராட்டங்கள் துவங்கி இன்றுடன் ஆறு மாதங்களாகிறது. சமகாலத்தில் மிகவும் பிரபலமான இந்த நீண்ட போராட்டத்திற்கு, 1906-ஆம் ஆண்டு நிகழ்ந்த பஞ்சாப் விவசாயிகளின் கிளர்ச்சி என்ன மாதிரியான பாடிப்பினைகளை வழங்கிறது என்று பார்போம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளைநில காலனித்துவ மசோதாவிற்கு எதிராக, பஞ்சாப் மாகாணத்தில் மிக தீவிரமாக நடந்துவந்த விவசாயப் போராட்டங்களை, 1907 மே 26 அன்று இந்திய வைஸ்ராய் லார்ட் மிண்டோ தனது ‘தனியதிகார’ த்தைப் […]

மேலும் படிக்க . . .

மோடிக்கு இனி தாடி தேவையில்லை! – வங்காள தேர்தல் முடிந்துவிட்டது

சின்ன ட்ரிம் செய்த தாடியுடன் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஓராண்டாக நீளத் தாடி வளர்த்து வருகிறார். அவரது தாடி ஒரே சீராக வளரவில்லை என்றாலும், சிரமப்பட்டு நீளமாக தாடி வளர்த்திருக்கிறார். அது இந்துத்துவ சக்திகளான பிஜேபியும் ஆர்எஸ்எஸும் மேற்கு வங்கத்தின் மீது போர்த் தொடுக்க முடிவெடுத்ததன் அடையாளம்தான். ஆம், அவர்கள் போர்த்தான் தொடுத்தார்கள். ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில், பிஜேபியும் ஆர்எஸ்எஸும்  மேற்கு வங்கத்தை தங்களது போர் களமாக தேர்வு செய்தன. […]

மேலும் படிக்க . . .

அசாமில் பிஜேபி வெற்றி! இந்துத்துவ பிரிவினையின் வெளிபாடு!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் அசாம் மாநிலம் ஒன்றில் மட்டும் பிஜேபி வெற்றிப் பெற்றிருக்கிறது. இது ஏற்கனவே பிஜேபி ஆட்சி செய்து வந்த மாநிலம்தான் என்றபோதும், இங்கு பிஜேபி வெற்றிப் பெற்றிருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு காரணம், கடந்த ஒராண்டிற்கு முன் அங்கு நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள். பிஜேபி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் நேரடியாக பாதிப்பது அசாம் மாநிலத்தைத்தான். ஏற்கனவே, உச்சநீதமன்றத்தால் […]

மேலும் படிக்க . . .

கர்ணன் திரைப்பட வெற்றியும் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியும்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. அது வெளிவருவதற்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு, வெளிவந்ததும் பல விவாதங்களை எழுப்பியது. அதில் முக்கியமானது, அந்த படம் காட்டும் சம்பவங்கள். அது 1997-ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்பட்டது. அது எதேச்சையாக காட்டப்பட்டதா அல்லது உள்ளோக்கத்துடன் காட்டப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு சமரசத்தை ஏற்படுத்தினார். அதற்கு பின்னும் கூட அந்த திரைப்படம் அது காட்டும் சம்பவங்கள் நிகழ்த […]

மேலும் படிக்க . . .