“சமூக விலகல்,” இல்லை ! நோய் விலகல்தான் !

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 24 அன்று தேசிய ஊரடங்கை அறிவித்துவிட்டு, இந்த கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற “சமூக விலகல்தான்” ஒரே தீர்வு என்று அறிவித்தது முதற்கொண்டே, இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் எல்லோருமே இதே சொல்லாக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். நாம் இதனை ‘நோய் விலகல்’ என்றுதான் பயன்படுத்த வேண்டுமே தவிர, சமூக விலகல் என்று பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், பல்லாயிரம் வருடங்களாகவே சமூகத் தீண்டாமையையும், சாதிய விலகலையும் கண்டுவந்துள்ள நாடுதான் இந்தியா. இது தேசிய […]

மேலும் படிக்க . . .

நாவல் கொரோனா வைரஸ்- அறிந்ததும் அறியாததும் !

தொற்று தொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் உள்ள செல்களில் மட்டுமே SARS-CoV-2 (நாவல் கொரோனா) கிருமி தொற்ற முடியும். இந்த செல்களில்தான் ACE2 எனும் ஏற்பிகள்(Receptors) உள்ளன ACE2 ஏற்பிகளுடன் மட்டுமே SARS-CoV-2 பற்றிக்கொண்டு செல்களுக்குள் புகமுடியும். எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத தோல் மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது.  யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் என்பது போல, இந்த வைரஸ் நமது கைகளின் வழியேதான் கண், வாய், அல்லது மூக்குப் […]

மேலும் படிக்க . . .

யார் பெற்ற மகனோ ! கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நபர் !

கொசுவினால் மலேரியா பரவுவது போல, எதோ விலங்கின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்றுதான் முதலில் கருதினார்கள்.  பிறகுதான், நேருக்குநேர் மனித சந்திப்பின் வழியாகவே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது என, நோயாளிகளை குறித்த நோய்ப்பரவல் ஆய்வு (Epidemiology) தெளிவுபடுத்தியது. மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என அறிந்த பிறகு யார் யாருக்கு, எவரிடமிருந்து பரவியது என, தொற்றுநோயின் மூலத்தை தேடி ஆய்வு நடத்தினார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தொற்று எங்கே ஏற்பட்டது, யாருக்கு ஏற்பட்டது […]

மேலும் படிக்க . . .

க.அன்பழகன்: திராவிட இயக்க சகாப்தத்தின் கடைசி ஆளுமையும் காலமானது !

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கமானது. சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகமானது. அதிலிருந்து  கிளைத்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. இந்த காலகட்டம்தான் திராவிட இயக்கத்தின் சகாப்தம். இதில், முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர் க அன்பழகன்.1940-ல் சுயமரியாதை இயக்க உறுப்பினர் ஆனதில் இருந்து துவங்குகிறது, அவரது அரசியல் வாழ்க்கை. நாற்பதுகளின் தொடக்கத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில்   தன்னந்தனியாக நின்று, அன்பழகன் செய்த சுயமரியாதை பிரச்சாரம்தான் அடுத்த சில ஆண்டுகளில் ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை திராவிட இயக்கத்தின் தவிர்க்கமுடியாத மையப்புள்ளியாக மாற்றியது.. […]

மேலும் படிக்க . . .