உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள்

இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காணமுடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவுபோல் இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இந்த சட்டங்களை கறுப்பு சட்டங்கள் […]

மேலும் படிக்க . . .

திகாயத் – விவசாயிகளின் பெருந்தலைவன்! இது நினைவுகூற வேண்டிய தருணம்!

“லக்னோவிலோ டெல்லியிலோ அமர்ந்திருப்பவர்கள் எங்களுடைய விதியைத் தீர்மானிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. எங்கள் விதியை நாங்கள்தான் தீர்மானிப்போம்.” -திகாயத்தின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் இந்திய விவசாயிகளின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டியது அவசியமாகிறது. சௌத்ரி மகேந்திர சிங் திகாயத் 1988-ஆம் ஆண்டு டெல்லியில் நடத்திய முற்றுகைப் போராட்டம் ஒரு மாதகாலம் நீடித்ததால், தலைநகரமே ஸ்தம்பித்துபோனது. இந்திய அரசின் அதிகாரம் ஆட்டம் கண்டது. இதில் ஏற்பட்ட படிப்பினையின் காரணமாகத்தான் , டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு என்றே தனியாக, […]

மேலும் படிக்க . . .

‘புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்’- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை சுதந்திரப் போராட்டத்திற்கு இணையானதாக பார்க்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என்று கூறியுள்ளார். அதே சமயம், நாட்டை ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க விவசாயிகள் மீண்டும் போராடுவார்கள் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விவசாய அமைப்புகள் நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தத்தால் பஞ்சாப் முழுவதுமாக மூடப்பட்டது. ரயில் தடங்களையும் சாலைகளையும் விவசாயிகள் மறிப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் […]

மேலும் படிக்க . . .

மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக வடஇந்தியாவில் வெடித்தது விவசாயிகள் கிளர்ச்சி !

சமீபத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள விவசாய மசோதாக்கள் நாடு தழுவிய போராட்டங்களை வெடிக்க வைத்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள்  வெள்ளிக்கிழமை பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தன. விவசாயிகளுடைய தொடர் போராட்டங்களின் காரணமாக கடந்த திங்கள் கிழமையில் இருந்தே வடமாநிலங்களில் இரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், வட இந்தியாவில் இந்தப் போராட்டம் பெரும் கிளர்ச்சியாக மாறியுள்ளது. நெல் விவசாயிகளைவிட கோதுமை விவசாயிகள் கொந்தளித்துப் போயுள்ளனர். உத்திரப் பிரதேசத்தின் நொய்டா […]

மேலும் படிக்க . . .

வேளாண் மசோதா நிறைவேற்றம் – பாராளுமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்ச்சைக்குரிய 2 வேளாண் பண்ணை மசோதாக்களை, பாராளுமன்ற மாநிலங்களவையில் மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டபோது, சர்ச்சைக்குரிய முறையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுதித் தருதல்) மசோதா. விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய 2 […]

மேலும் படிக்க . . .

பீகார் தேர்தல்: பிஜேபி- ஜேடியு கூட்டணியில் குழப்பம் !

பீகாரில் ஜேடியு-பிஜேபி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருக்கிறார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஜேடியு-பிஜேபி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் இப்போது பிரச்சினையை கிளப்பியிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு, டெல்லியில் பிஜேபியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார் சிராக் பாஸ்வான். அப்போது பீகாரில் ஜேடியுவைவிட பிஜேபி அதிக […]

மேலும் படிக்க . . .

சுவாமி அக்னிவேஷ் மறைந்தார் – ஒரு மனித உரிமை நெருப்பு அணைந்தது !

சுவாமி அக்னிவேஷ் தனது 81-வது வயதில் காலமானார். கடந்த இரண்டுமாத காலமாக, கல்லீரல் பாதிப்பிற்காக டெல்லியின் கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைப் பெற்றுவந்தவர், கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை காலமானார். அவர் மனித உரிமை, மதச்சார்பின்மை மற்றும் கொத்தடிமை, தொழிலாளர் விடுதலை ஆகியவற்றிற்கான செயல்பாட்டாளர். ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைப்பதுதான் சுவாமி அக்னிவேஷின் வழிபாடு. அவர் காவி நிறமில்லாத, குங்குமப்பூ நிற ஆடை அணிந்த சந்நியாசி. அவர் தனது உடையின் நிறத்தை, நெருப்பின் நிறம் […]

மேலும் படிக்க . . .

பொறுக்கித்தனம் செய்யும் பிஜேபி ஐடி விங் – சுப்ரமணியன் சுவாமி

தன்னுடைய சொந்தக் கட்சியையே உள்ளபடி விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமடைந்திருக்கும் ஒரு மூத்த பிஜேபி உறுப்பினர், இந்த வாரத்தில் போதுமான அளவுக்கு வேட்டு வைத்திருக்கிறார். வழக்கறிஞரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கறுப்பாட்டை குறிவைத்திருக்கிறார். பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மால்வியா நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இப்படி அவர் போட்ட டிவீட் சில நிமிடங்களிலேயே வைரலாகிப்போனது, விமர்சகர்கள் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். போலி டிவீட்களையும், வாட்சப் செய்திகளையும் […]

மேலும் படிக்க . . .

மோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ட்வீட்டில்; “மோடி அரசு இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேர்வுகளை நடத்த வேண்டும், நடத்திய தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிக்க வேண்டும் மற்றும் பணி நியமனக் கடிதங்களை வழங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளர். ராகுலின் மற்றொரு இந்தி ட்வீட்டில்; “12 கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமும் இல்லை. சாமானிய மனிதனுக்கு வருமானமும் இல்லை. நாட்டில் பாதுகாப்பும் இல்லை, […]

மேலும் படிக்க . . .

லாலுவின் சிறைச்சாலை அரசியல் – சூடுபிடிக்கும் பிகார் தேர்தல் களம்

பிகார் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், சிறைக்குள் இருந்தபடியே தேர்தல் பணிகளைத் துவங்கியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா மத்திய சிறைச்சாலையில் லாலு அடைக்கப் பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலையைக் காரணம்காட்டி, ரிம்ஸ் எனப்படும் இராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருந்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். தேர்தல் வேலைகள் செய்ய வசதியாக லாலுவுக்கு ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு […]

மேலும் படிக்க . . .