பிஜேபியின் ‘பிளாக்மெயில்’ அரசியல் – பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு !

பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரேநாளில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர். அதற்கு முன்பாக, பிஜேபியின் பீகார் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அதில், பிஜேபி கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், பீகார் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கொடிய தொற்றுநோயை வைத்து […]

மேலும் படிக்க . . .

பீகார் தேர்தல்- கூட்டணி குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பிஜேபி

பீகாரைப் பொருத்தவரை என்.டி.ஏ.-கூட்டணியின் வாக்குகளை கவரக்கூடிய முகம் முதல்வர் நிதீஷ் குமார். அவரை எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதால், பிஜேபி தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. சமீபத்தில் மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் தற்போதைய மத்திய மோடி அரசில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பீகார் தேர்தலில் பாஸ்வானின் எல்ஜேபி தனி அணி அமைத்து போட்டியிடுகிறது. அதேசமயம், பிஜேபி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை எனவும் அறிவித்திருப்பதால், சிராக் பாஸ்வானுடன் எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று […]

மேலும் படிக்க . . .

நீதித்துறை – ஜெகன் மோதல்- பிஜேபியின் சதுரங்க வேட்டை!

சமீபத்தில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லிச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அதனால், பிஜேபி கூட்டணியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சேரப்போவதாக செய்திகள் அடிப்பட்டன. ஆனால் அதற்கு மாறாக, எதிர்பாராத இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மற்றும் ஹைதராபாத் உயர்நீதமன்ற நீதிபதிகள் மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டுகள் எழுப்பியது, இது இந்திய நீதித்துறை மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொன்று, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் […]

மேலும் படிக்க . . .

உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவ காட்டு தர்பார்!

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் மனிஷா, நான்கு உயர்சாதி தாக்கூர் ஆண்களால் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டாள். கழுத்து நெரிக்கப்பட்டு, முதுகெலும்பு, கைகால்கள் உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் 14 நாட்கள் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இறந்துபோனாள். அவளது உடல், அவளது பெற்றோரிடம் தரப்படாமல், உத்தரப்பிரதேச காவல்துறையால், பின்னிரவு 3 மணியளவில் எரிக்கப்பட்டது. இது ஆதித்யநாத்தின் அரசு பின்தங்கிய குடிமக்களுக்கு எந்தளவு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது என்பதற்கான சமீபத்திய உதாரணம். உத்தரப்பிரதேசத்தில் தலித் மற்றும் […]

மேலும் படிக்க . . .

பீகார் தேர்தல்- பஸ்வானின் மறைவு- நிதீஷ் குமாருக்கு ஆப்பு

ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு பீகார் தேர்தல் களத்தில், நிதீஷ் குமாருக்கு எதிரான கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதற்கு முன்பாகவே, 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமாரின் வெற்றி ஊசலாட்டத்தில்தான் இருந்தது. நிதீஷ் குமாரின் ஜேடியு- பிஜேபி கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சியும் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, நிதீஷ் குமாரின் தலித் ஆதரவு பாசாங்கை எதிர்த்து, ராம் விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான் வெளிப்படையாக சவால் விட்டார். […]

மேலும் படிக்க . . .

அந்தோ பரிதாபம் ! ஓபிஎஸ்-ஐ கைவிட்டதா பிஜேபி?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று ஏறக்குறைய முடிவாகிவிட்டது. கொரோனா ஆய்வுப்பணி என்ற பெயரில், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்தபோதே, தன்னை ஒரு சுறுப்பான முதல்வர் என்பதை எடப்பாடி நிலைநிறுத்திக் கொண்டார். அத்துடன், அடுத்த முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதையும் அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டார். இந்த சூழ்நிலையில்தான், அதிமுகவிற்குள் அடுத்த முதல்வர் வேட்பாளர் பிரச்சினை சூடுபிடித்தது. இதற்குமேலும் பொறுத்திருந்தால், எடப்பாடியை எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற நிலையில், ஓபிஎஸ் தரப்பு முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை கிளப்பியது. போஸ்டர் ஒட்டுவதில் […]

மேலும் படிக்க . . .

அறம் தேடும் பாதை ! காந்தியும் – சனாதனிகளும்

அ.மார்க்ஸின் காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் என்ற நூலை முன் வைத்து……. எனது பதிமூன்று பதினான்காவது வயதில் காந்தியின் சத்தியசோதனை நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வயதில் அது காந்தி தாத்தாவின் கதை என்பதற்கும் மேலே எதுவும் எனக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்போதே சுயபரிசோதனை என்ற சொல் என் மனதில் பதிந்துவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை சுயபரிசோதனை என்ற சொல்லும் கருத்தாக்கமும் என் மனதில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இன்று மனிதனின் தனி வாழ்விலும், பொது […]

மேலும் படிக்க . . .

‘நீதி கண்ணீர் சிந்துகிறது’ -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி ஆதங்கம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலைசெய்து வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் கங்குலி கூறுகையில்; “ ‘நீதியின் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது, நீதி கண்ணீர் சிந்துகிறது’ என்ற ரவீந்திரநாத் தாகூரின் தீர்க்கதரிசன வாசகம், தற்போதைய இந்தியாவில், மீண்டும் உண்மையாகியுள்ளது” என்கிறார். 1932-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாகூர் எழுதிய கவிதை […]

மேலும் படிக்க . . .

எடப்பாடியார் விவசாயிகளின் துரோகியா?

மத்திய மோடி அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை அதிமுக ஆதரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த மசோதாக்களை ‘விவசாயிகளின் மரண உத்தரவு’ என்கிறது.  இந்த மசோதாக்கள் விவசாயத்தின் நலனுக்கு எதிரானது என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வடமாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து ஒரு கிளர்ச்சியாகவே மாறிவிட்டது. தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 28-ஆம் தேதி, திமுக கூட்டணிக் கட்சிகள் மாநில அளவிலான போராட்டங்களை நடத்தின. முதல்வர் எடப்பாடியார் தான் போகும் இடங்களில் எல்லாம், […]

மேலும் படிக்க . . .