சோளிங்கர் வெற்றி யார் பக்கம்!

2019 தேர்தல் HOME

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், வேலூர் மாவட்டத்திற்குள் சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

2019 இடைத்தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்:

அதிமுக சம்பத்
திமுக   அசோகன்
அமமுக மணி

கடந்தகால தேர்தல்களின் வாக்குவிவரம்:

2014 எம்பி தேர்தல்:

அதிமுக 79,207
திமுக 37,145
பிஜேபி கூட்டணியில் பாமக 60,797
காங்கிரஸ் 11,278

2016 எம்எல்ஏ தேர்தல்:

அதிமுக 77,651
திமுக 67,919
பாமக 50,827
பிஜேபி 1,468
மக்கள் நல கூட்டணி 6,167
 • 2016 எம்எல்ஏ தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் மணி, தினகரனை ஆதரித்ததால் பதவி இழந்தார். அவர் இப்போது இங்கு அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 • இந்த தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மை. அடுத்தபடியாக தலித் மக்கள் உள்ளனர். முதலியார்கள் கணிசமாக உள்ளனர். மேலும், முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழ்கின்றனர். கிறிஸ்துவர்களும் பரவலாக உள்ளனர்.
 • 2014 எம்பி தேர்தலைவிட 2016 எம்எல்ஏ தேர்தலில் அதிமுக 1,556 வாக்குகள் மட்டுமே குறைந்துள்ளது.
 • ஆனால், திமுக 30,774 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
 • 2014 எம்பி தேர்தலில் பிஜேபி கூட்டணியில் போட்டியிட்ட பாமக 60,797 வாக்குகள் பெற்றது. அதே பாமக எம்எல்ஏ தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 50,827 வாக்குகள் பெற்றுள்ளது. 9,970 வாக்குகள் மட்டுமே குறைவு.
 • பிஜேபி, பாமக கூட்டணியால் அதிமுக கடந்த தேர்தல்களில் பெற்ற தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கும்.
 • இங்கு அமமுகவும் கணிசமாக அதிமுக வாக்குகளை பிரிக்கும்.
 • இப்படி எதிரெதிராக திரும்பும் வாக்குகளால் இங்கு அதிமுகவும் திமுகவும் சமபலம் பெறும்.
 • ஆனால், பாமகவின் நிலையான வாக்குவங்கி அதிமுகவின் இழப்புகளை சரிகட்டிவிடும்.
 • ஆகமொத்தம், இங்கு அதிமுக வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
 • சதுரங்கம் மாஸ் சைக்காலஜி டீம்.

*முடிவுகள் தேர்தல் அபாயத்திற்கு உட்பட்டவை.

                                                      ———————————–