குடியாத்தம் (தனி) வெற்றி யார் பக்கம்!

2019 தேர்தல் HOME

வேலூர் மாவட்டம், வேலூர் மக்களவைத் தொகுதிக்குள் குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

2019 இடைத்தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்:

அதிமுக மூர்த்தி
திமுக   காத்தவராயன்
அமமுக ஜெயந்தி பத்மநாதன்

கடந்தகால தேர்தல்களின் வாக்குவிவரம்:

2014 எம்பி தேர்தல்:

அதிமுக 79,741
திமுக – கூட்டணியில் முஸ்லீம் லீக் 44,895
பிஜேபி, பாமக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி 45,768
காங்கிரஸ் 3,597

2016 எம்எல்ஏ தேர்தல்:

அதிமுக 94,689
திமுக 83,219
பாமக 7,505
பிஜேபி 891
மக்கள் நல கூட்டணி 3,140
  • 2016 எம்எல்ஏ தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாதன், தினகரனை ஆதரித்ததால் பதவி இழந்தார். அவர் இப்போது இங்கு அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
  • இந்த தொகுதியில் தலித் மக்கள் அதிகமாக உள்ளனர். வன்னியர்களும் முதலியார்களும் கணிசமாக இருக்கின்றனர். முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழ்கின்றனர். கிறிஸ்துவர்கள் பரவலாக உள்ளனர்.
  • 2014 எம்பி தேர்தலைவிட 2016 எம்எல்ஏ தேர்தலில் அதிமுக 14,948 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. திமுக 38,324 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
  • எம்பி தேர்தலில் 45,768 வாக்குகள் பெற்ற பிஜேபி, பாமக, புதிய நீதிக்கட்சி கூட்டணி உடைந்ததால் எம்எல்ஏ தேர்தலில் வாக்குகள் சிதறிவிட்டன.
  • இந்த தேர்தலில் பாமகவும் புதிய நீதிக்கட்சியும் அதிமுக கூட்டணியில் இருப்பது அதிமுகவுக்கு லாபம்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முஸ்லீம் லீக்கும் திமுக கூட்டணியில் இருப்பது திமுகவுக்கு லாபம்
  • இந்த தேர்தலில் பாமகவும் பிஜேபியும் அதிமுக கூட்டணியில் இருப்பதால் கடந்த தேர்தல்களில் அதிமுக பெற்ற தலித் மக்கள் வாக்குகளையும் சிறுபான்மையினரின் வாக்குகளையும் இழக்கும்.
  • இப்படி எதிரெதிராக திரும்பும் வாக்குகளால் அதிமுகவும் திமுகவும் சமபலம் பெறலாம்.
  • ஆனால், அதிமுகவின் வாக்குகளை குறிப்பிட்ட அளவு அமமுக பிரித்தால்கூட அது அதிமுகவை பாதிக்கும்.
  • ஆகமொத்தம், இங்கு திமுக வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
  • சதுரங்கம் மாஸ் சைக்காலஜி டீம்.

*முடிவுகள் தேர்தல் அபாயத்திற்கு உட்பட்டவை.

                                                      ———————————–