ஆம்பூர் வெற்றி யார் பக்கம்!

2019 தேர்தல் HOME

வேலூர் மாவட்டம், வேலூர் மக்களவைத் தொகுதிக்குள் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

2019 இடைத்தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்:

அதிமுக ஜோதிராமலிங்க ராஜா
திமுக   விஸ்வநாதன்
அமமுக பாலசுப்பிரமணி

கடந்தகால தேர்தல்களின் வாக்குவிவரம்:

2014 எம்பி தேர்தல்:

அதிமுக 58,103
திமுக 39,821
பிஜேபி, பாமக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி 44,257
காங்கிரஸ் 3,907

2016 எம்எல்ஏ தேர்தல்:

அதிமுக 79,182
திமுக 51,176
மக்கள் நல கூட்டணி 7,043
பாமக 4,643
பிஜேபி 5,760
 • 2016 எம்எல்ஏ தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி, தினகரனை ஆதரித்ததால் பதவி இழந்தார். அவர் இப்போது இங்கு அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 • இந்த தொகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்தபடியாக வன்னியர்கள், தலித் மக்கள், முதலியார்கள் கணிசமாக வாழ்கின்றனர். மேலும், கிறிஸ்துவர்களும் பரவலாக உள்ளனர்.
 • 2014 எம்பி தேர்தலைவிட 2016 எம்எல்ஏ தேர்தலில் அதிமுக 21,079 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
 • திமுக 11,355 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
 • 2014 எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளர் போட்டியிட்டபோது பிஜேபி, பாமக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி, திமுக கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 44, 257 வாக்குகளை பெற்றது.
 • ஆனால், 2016 எம்எல்ஏ தேர்தலில் பிஜேபி கூட்டணி உடைந்து பிஜேபி தனித்து போட்டியிட்டு 5,760 வாக்குகள் மட்டுமே பெற்றது. பாமக தனித்து போட்டியிட்டு 4,643 வாக்குகள் மட்டுமே பெற்றது.
 • கடந்த எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்கள் வாக்குகளை அதிமுகவும் திமுகவும் பிரித்துக் கொண்டன.
 • ஆனால், இந்த தேர்தலில் பிஜேபி, பாமக உடனான கூட்டணியால் அதிமுக முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்களின் ஆதரவை இழக்கும். அதுபோல திமுக வன்னியர்களின் ஆதரவை இழக்கும.
 • இப்படி எதிரெதிராக திரும்பும் வாக்குகளால் அதிமுகவும் திமுகவும் சமபலம் பெறும்.
 • இங்கு அமமுக அதிமுகவின் வாக்குகளின் ஒருபகுதியை பிரிக்கும்.
 • ஆகமொத்தம், இங்கு திமுக வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
 • சதுரங்கம் மாஸ் சைக்காலஜி டீம்.

*முடிவுகள் தேர்தல் அபாயத்திற்கு உட்பட்டவை.

                                                      ———————————–