குடிநீர் கேட்டு திமுக போராட்டம் ! மழை வேண்டி அதிமுக யாகம் ! பெரியார் மண்ணில் பெருங்கூத்து !

 தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது எங்கு பார்த்தாலும் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்.  தமிழக அரசு மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்ற கோரிக்கையுடன் திமுக, தமிழகம் முழுவதும் போராட்டங்களை அறிவித்து நடத்தியது.   பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.  மழை பெய்தால் தான் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்று […]

மேலும் படிக்க . . .

ஒரே நாடு, ஒரே தேர்தல் ! இந்திய ஜனநாயகத்துக்கு சாவுமணி !

மத்தியில் ஆட்சியை முடிவு செய்யும் மக்களவைத் தேர்தலை,  மாநிலங்களில் ஆட்சியை முடிவு செய்யும் சட்டமன்ற தேர்தலை   ஒரே நேரத்தில் நடத்துவது தான், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம். 2014 மக்களவைத் தேர்தலின்போது பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாக்குறுதியாக அளித்திருந்தது. இப்போது பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமுல்படுத்துவதில் பிஜேபி தீவிரம் காட்டுகிறது.இதற்காக அரசியல் கட்சியினருடன் பிரதமர் மோடி […]

மேலும் படிக்க . . .

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் கோஷங்கள் !

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றன. அதில், இரண்டாவது நாளான ஜூன் 18/2019 அன்று தமிழக எம்பிக்கள் 38 பேரும்  நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. தமிழகத்தின் அனைத்து எம்பிக்களும் தமிழிலேயே உறுதிமொழி கூறினார். இதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்றப்பட்டிருந்தது. தமிழக எம்பிக்கள் தமிழில்  உறுதிமொழியை படிக்கும்போது,உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொண்டு, சபாநாயகரால் சரி பார்த்துக் கொள்ளப்பட்டது. தமிழக […]

மேலும் படிக்க . . .

சோழமண்டலக் கடல் -ஓர் ஆய்வு தகவல்

சோழன் என்ற சொல், ஒரு அரச பரம்பரையின் பெயர் அல்ல, மன்னர்களின் வம்சாவழி பெயரும் அல்ல.சோழம்  என்பது நிலம் சார்ந்த பெயர்.இதுதான் சோழன் என மருவி இருக்கும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை எப்படி ஈழம் என்று அழைக்கிறோமே,, அதுபோல காவிரி டெல்டா பகுதி சோழம்  என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலத்தில் உருவாகும் எந்த ஒரு அரசனும் சோழன் என்று அழைக்கப்பட்டிருப்பான். சோழம் என்பது ஒரு இடம் சார்ந்த பெயர் என்பதையும் தாண்டி, கடல் பரப்பின் […]

மேலும் படிக்க . . .

ராஜராஜ சோழன் ஆட்சி இருண்ட காலம்! பா. ரஞ்சித் அதிரடி! நீதிமன்றம் கண்டனம்!

ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை உருவாக்கி தலித் மக்களுக்கான அரசியலை பேசி வருகிறார், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில். கடந்த ஐந்தாம் தேதி, நீல புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டி.எம் மணி அவர்களின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலித் சமூகத்தில் பிறந்த டி.எம் மணி, தனது இறுதி காலத்தில் இஸ்லாத்தை தழுவி  உமர் பரூக் ஆனார். […]

மேலும் படிக்க . . .

ஒரு காதல் ! இரண்டு தற்கொலைகள் !

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மரணமும், பதற்றத்தை ஏற்படுத்திய மரணமும், தர்மபுரி இளவரசன் மரணம்தான். இந்த மரணம் தற்கொலை அல்ல, ஆணவ கொலை என்று குற்றம் சாட்டப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியும் முற்போக்கு இயக்கங்களும் பெரியாரிச அமைப்புகளும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின.  இந்தப் போராட்டங்களின் விளைவாக,அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இளவரசன் மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை குழுவை அமைத்தார் அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை தற்போது  இந்து […]

மேலும் படிக்க . . .

மேகேதாட்டு அணை- விடாப்பிடியாக கர்நாடகம்! வேடிக்கை பார்க்கும் தமிழகம்!!

 கர்நாடகம் எதிர்பார்த்தது போல, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி விட்டார்.காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்ட வேண்டுமானால், தமிழகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று ஒப்பந்தங்கள் இருந்தபோதும்,அதையெல்லாம் மதிக்காமல், புதிய அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்னுமிடத்தில் ரூ5,912 கோடி செலவில் புதிய அணை […]

மேலும் படிக்க . . .

அதிமுகவில் வெடித்தது தலைமை யுத்தம்! பற்றவைத்த ராஜன் செல்லப்பா !

“அதிமுகவிற்கு அதிகாரம் கொண்ட ஒற்றை தலைமை வேண்டும்”  என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், மதுரை முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா இன்று (ஜுன் 8) பத்திரிகையாளர்களுக்கு அதிரடியாக பேட்டி  அளித்துள்ளார். இந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதிமுக சார்பில் மதுரையில் போட்டியிட்ட ராஜன்  செல்லப்பாவின் மகன் ராஜன் சத்யாவும் தோல்வியடைந்தார். தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

மேலும் படிக்க . . .

ஒடிசா மோடியின் உண்மை முகம் !

இந்த மக்களவைத் தேர்தல் முடிந்து,  பிஜேபி அமோக வெற்றி பெற்ற கையோடு,ஒடிசாவை சேர்ந்த ஒரு பிஜேபி எம்பி  தெருவோர குழாயில் குளிப்பது போன்றும், சைக்கிளில் ஊரை சுற்றி வருவது போன்றும், குடிசையில்  வாழ்வது போன்றும், வீடியோ காட்சிகள் வெளிவந்தது, அதைத் தொடர்ந்து, ஆஹா எவ்வளவு எளிமையான எம்பி என்ற பாராட்டுகள் சமூகவலைதளங்களில் பரபரப்பாக வலம் வந்தன.இவர் ஒடிசாவின் மோடி என்றும்  புகழப்பட்டர்.   அட இந்த காலத்தில் இப்படியும் ஒரு அரசியல்வாதியா? என்று நாமும் ஆய்வில் இறங்கினோம் ஒடிசா […]

மேலும் படிக்க . . .

மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் ! அதான்டா இந்துத்துவா !

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பிஜேபி தனது அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு பதவி கொடுத்துள்ளதாம்!  தமிழகத்தில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிஜேபி கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அதில் தர்மபுரியில் வென்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று  காத்திருந்தார். ஆனால்,அவருக்கு தராமல் கன்னியாகுமரியில் வென்ற பிஜேபி எம்பி பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது   தமிழகத்தில் இந்த முறை பிஜேபி ஒரு இடத்தில் கூட […]

மேலும் படிக்க . . .