சலாம், இர்பான் கான் சலாம் !

பல விருதுகளைப் பெற்ற சலாம் பாம்பே இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் இர்பான் கான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் காலையில் இறந்துபோனார். கடந்த சனிக்கிழமை இர்பான் கானின் தாயார் சயீதா, ஜெய்ப்பூரில் மரணமடைந்தார். ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் இர்பான் கான் கலந்துகொள்ளாத நிலையில், தாயாரின் மறைவுக்கு அடுத்த சில நாட்களிலேயே இவரும் மரணமடைந்துள்ளார். நாம் இவரை இந்தி நடிகர் என குறிப்பிட்டாலும், இர்பான் கான் சர்வதேச திரை […]

மேலும் படிக்க . . .

அரசின் தடுமாற்றம் ! அர்த்தம் இழக்கும் ஊரடங்கு !!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலில் இருப்பது சுகாதார ஊரடங்கு. இது கலவரத்தைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு அல்ல. இதை காவல்துறையை மட்டும் வைத்து நடைமுறைப்படுத்திவிட முடியாது. மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அரசும் மக்களுக்கு புரியவைக்க வேண்டும். இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 33 (27/04/20) நாட்கள் ஆகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து, ஒருவகை உளவியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்த எவ்வளவு  பயன்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் எந்த அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற […]

மேலும் படிக்க . . .

மனநலத்துறை மக்களுக்கானதா ?

இந்தியாவில் மக்களுக்கும் அரசுக்கும் மனநலத் துறையின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  மனநலத்துறை என்பது மனநல மருத்துவர்கள்,  உளவியல் நிபுணர்கள்,  மனநல ஆலோசகர்கள் போன்றோரை உள்ளடக்கியது.  மனநோய்களுக்கும் குறிப்பிட்ட சில மனநல சிக்கல்களுக்கும்,  தீர்வைக் கொடுக்கும் துறை.  மன நோய்களுக்கு அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து, பெரும்பாலும்  மருந்துகள் மூலமாகவும்,  மனநல சிக்கல்களுக்கு அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து சிலசமயம்  மருந்துகள் மூலமாகவும், பலசமயம் ஆலோசனை சார்ந்த சிகிச்சை மூலமாகவும் தீர்வை கொடுக்கின்றது. மனநோய்கள் மற்றும் மனநல சிக்கல்களுக்கு,  உடல் […]

மேலும் படிக்க . . .

அமெரிக்கா-சீனா மோதல்! கொரோனா கொண்டுவரும் போர் !!!

கொரோனாவின் கோரத்தாண்டவம் அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிய கணக்குப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயார்க் நகரில் மட்டும் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,600 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா ஆரம்பம் முதலே சீனாவை குற்றச்சாட்டி வருகிறது. வூகான் நகர இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சீனா சொல்வதை, அமெரிக்கா நம்பவில்லை. […]

மேலும் படிக்க . . .

பாவம், வௌவால்கள் !!!

இது கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலம். கண்ணுக்குத் தெரியாத நோயை எண்ணி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மன உளைச்சல் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்களின் மனதில் வெறுப்பும் கோபமும் இயற்கையாகவே எழும். இந்த சந்தர்ப்பத்தில்  சின்னச்சின்ன விசயங்கள்கூட அவர்களை திசைத் திருப்பிவிடும். கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய முதல் சுற்றிலேயே, பாம்பு, தேளு, வௌவால் என்று சீனர்கள் கண்டதையும் தின்று கொரோனா வைரஸை கிளப்பிவிட்டார்கள் என்றும், வூகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட உயிரியல் ஆயுதமான […]

மேலும் படிக்க . . .

கொரோனா வைரஸை வென்ற தைவான்!

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு முன் வல்லரசுகளே வாயடைத்து நிற்கையில், குட்டி நாடான தைவான் கொரோனாவை வென்றிருக்கிறது.தைவானில் இதுவரை 400 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து பல ஆயிரம் மையில் தூரத்தில் இருக்கும் அமெரிக்கா, இத்தாலி,பிரிட்டன் போன்ற நாடுகளே கொரானா வைரஸிடம் சிக்கி தவிக்கையில், சீனாவுக்கு அருகே இருக்கும் தைவான் அதிகப் பாதிப்பின்றித் தப்பித்தது  மிக பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.   இந்நிலையில்,சமீபத்தில் தைவான் அதிபர் சாய் இங் –வென் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர்: […]

மேலும் படிக்க . . .

எதிர்கட்சிகள் நிவாரணம் வழங்கலாம்- தடையை உடைத்தது உயர்நீதிமனறம்!

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது மனிதாபிமான செயல் என்றுதான் இதுவரை கருதப்பட்டது, சுனாமி ஆழி பேரலை, தானே புயல், கஜா புயல் மற்றும் பெரும் வெள்ள காலங்களில் அரசியல் கட்சியனரும், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவு நிவாரண உதவிகள் செய்தனர். ஆனால் இந்த கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில், ஊரடங்கையும், சமூக விலகலையும் காரணம் காட்டி, அரசைத் தவிர மற்றவர்கள் நேரடியாக நிவாரண உதவிகள் செய்யக்கூடாது என தமிழக அரசு தடை விதித்திருந்தது. […]

மேலும் படிக்க . . .

இயல்பிலேயே இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் உண்டு !

அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் போன்ற அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளையே கொரோனா சூறையாடி வருகிறது. இந்த நாடுகளில் பாதிப்பும் அதிகம், இறப்பு எண்ணிக்கையும் அதிகம். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம். இதுதான் இந்தியர்களுக்கு இயல்பிலேயே கொரோனா எதிர்ப்பு ஆற்றல் உண்டோ என்று சிந்திக்க வைக்கிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு ஆய்வு […]

மேலும் படிக்க . . .

கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வு ஆகாது ! -ராகுல் காந்தி

கொரோனா எப்போது ஒழியும், இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியாமல் மக்கள் தவியாய் தவிக்கிறார்கள். நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. ஓரளவு கையிருப்பு இருந்தவர்கள் கூட இப்போது சிரமத்திற்கு ஆளாகிவருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை அழிக்க வழிவகை தோடுகிறதா அல்லது ஊரடங்கை அறிவித்து, காலம் கடத்துவதின் மூலம் கொரோனா தானாக அழிந்துவிடும் என எதிர்பார்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி […]

மேலும் படிக்க . . .

மேற்கு வங்கத்தின் மீது பாயும் மத்திய பிஜேபி அரசு !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசால் சுகாதார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது முதலில் ஒரு நாள், அடுத்து 21 நாட்கள், இப்போது மேலும் 19 நாட்கள் என அமுல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை நடைமுறைப் படுத்துவதில் அனைத்து மாநில அரசுகளும் பல சங்கடங்களை சந்தித்து வருகின்றன. தினகூலிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் வருமானம் இழப்பதால்,அவர்களின் அத்தியாவசிய தேவை. மாநில அரசுகளால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் ஆதரவற்றவர்களுக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் உணவளிப்பதிலும் சிரமம். […]

மேலும் படிக்க . . .