மக்களை முட்டாள்களாக்க – தொடரும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் !

ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்படுகிறது. அதை சி-வோட்டர் என்னும் நிறுவனம் செவ்வனே செய்துவருகிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மட்டும், சி-வோட்டர் நிறுவனம் மூன்று முறை, மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த மே மாதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், உலக தலைவர்களிலேயே மோடி முன்னிலை வகிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு நேரெதிராக, உலகிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]

மேலும் படிக்க . . .

மாஜிஸ்ட்ரேட் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் – நீதிபதி கே.சந்துரு

“நீதித்துறை ஒழுங்கின்மை, கைது நடவடிக்கைக்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் வழக்கை தவறாக வழிநடத்தியிருப்பது” ஆகியவற்றிற்காக, சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் பி.சரவணன் பதவீ நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் இம்மானுவல் பென்னிக்ஸ் ஆகியோர், காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளை ஏளனம் செய்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார். “காவல்துறை தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதும், மாஜிஸ்ட்ரேட் கூட கைது செய்வதற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை […]

மேலும் படிக்க . . .

அதிகாரம் யாருக்கு? – புதுமைப்பித்தன்

பாகம் – 1 முகப்புச்சாவி இது அரசியல் சாசனத்தின் சகல அம்சங்களையும் பரிபூரணமாக விவாதிக்கும் புஸ்தகம் அல்ல. இதில் விடப்பட்ட விஷயங்கள் பல. சொல்லப்பட்டவற்றில், பாஷை தெளிவே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியே இது. சாத்தியமானவரை எதிர்மறை ரூபத்தின் சூத்திரபூர்வமாக லட்சண வரம்புகளை விவரித்துக் கொண்டு போவதே நோக்கம். அரசியல் கட்டுக்கோப்பு சோதனையில் லட்சியப் பேச்சுக்கு இடம் இல்லை. கருணை என்ற வார்த்தையின் பொருள் இப்பொழுது கிழங்கு வர்க்கத்தில் அடங்கிவிட்டது. அரசியல் மண்ணில் அது முளைக்காவிட்டால் […]

மேலும் படிக்க . . .

சாத்தான்குளம் இரட்டைக் கொலை! தமிழகக் காவல்துறை கலைக்கப்பட வேண்டும்! -தோழர்.தியாகு

அரசே! நீதிமன்றமே! கொலைகாரர்களைச் சிறையிலடைத்துக் கொலைவழக்குப் போடாதது ஏன்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்.  கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மக்கள்-ஊரடங்கு என்று தொடங்கி முழு முடக்கம் ஆட்சி செய்யத் தொடங்கியது முதலே காவல்துறையின் காட்டாட்சி தொடங்கி விட்டது. நடந்தோ இருசக்கர ஊர்தியிலோ […]

மேலும் படிக்க . . .

முதலில் மோடி, பிறகுதான் இந்தியா: இதுதான் வெளியுறவுக் கொள்கை! -ஷிவம் விஜ்

டொனால்டு டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் தன்னுடைய வெளிவரவிருக்கும் புத்தகத்தில், அமெரிக்க அதிபர் தன்னுடைய மறுதேர்தல் விவகாரத்தில் சீனாவின் உதவியை நாடியுள்ளது பற்றி வெளிப்படுத்தியுள்ளார். இப்படி வெளிவந்துள்ள இதுவும், வேறுபல விஷயங்களும் கவலைக்குரியவைதான் என்றாலும், ஆச்சரியப்பட வேண்டியதல்ல. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை டிரம்ப் தன்னுடைய சொந்த அரசியல் நிலைப்பாட்டை உயர்த்திக்கொள்ளப் பயன்படுத்துகிறவர் என்பது தெரிந்த விஷயம்தான்.  டிரம்பை காட்டிலும் அளந்துபார்ப்பதற்கு கடினமானவர்தான் என்றாலும், இந்தியப் பிரதம மந்திரி மோடியும் இதையேத்தான் செய்து வருகிறார்: […]

மேலும் படிக்க . . .

மோடிக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை: வார்த்தைகளில் கவனம் தேவை !

உலகின் எந்தத் தலைவர்களும் செய்யாத அளவுக்கு இந்தியப் பிரதமர் மோடி உலக தனது 6 வருட பதவிக்காலத்தில் உலக நாடுகளில் ஏறக்குறைய எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டார். ஆறு வருடங்களுக்கு முன்னர், 2014-இல் முதல்முறை ஆட்சிப் பொறுப்பேற்றபோது மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை ‘உலக அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்துவது’ என விவரித்தார்கள். மோடியின் வருகைக்கு முன்னர் உலக அளவில் இந்தியாவிற்கு எந்த மதிப்பும் இல்லை என்றுகூட பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். ஆனால் அதே […]

மேலும் படிக்க . . .

எல்லைப் பிரச்சினை – இந்தியா-சீனா-அமெரிக்கா- முக்கோண சிக்கல் !

ஏற்கனவே, இந்தியாவை கொரோனா சூழ்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பதிப்பில், உலகின் இரண்டாவது இடத்திற்கு இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்தியாவை போர்மேகமும் சூழ்கிறது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு வீரர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதில், இந்திய தரப்பில் ஒரு கர்னல் உட்பட 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. […]

மேலும் படிக்க . . .

அதிகார துஷ்பிரயோகம் பற்றி . . . – ஓஷோ

அன்புள்ள ஓஷோ, அதிகார துஷ்பிரயோகம் பற்றிய உங்கள் கருத்து என்ன? ஒரு ஆங்கில தத்துவவாதியின், ஒரு புகழ்பெற்ற அறிக்கையை கவனியுங்கள். அதாவது, “அதிகாரம் லஞ்சம் நிறைந்தது. முழுமையான அதிகாரம், முழுமையான லஞ்சத்தன்மை உடையது.” ஆனால், இந்தக் கூற்றை நான் அங்கீகரிக்கவில்லை, என்னுடைய அணுகுமுறை எப்போதும் வித்தியாசமானதே! எல்லோரிடமும் கோபம், வஞ்சம், பேராசை, பற்று என்று எல்லாமே நிறைந்துதான் இருக்கின்றன. ஆனால், அவர்களிடத்தில் அதிகாரம் இல்லை. ஆகவே, அவர்கள் சந்நியாசி வேஷம் போடுகிறார்கள்! நீங்கள் ஒன்றை எதிர்க்க வேண்டுமானால் […]

மேலும் படிக்க . . .

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வேதாந்தா!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், உயிரிழந்த 13 பேருக்கான இரண்டாம் ஆண்டு நினைவு நாளை, கடந்த மார்ச் 22-ஆம் தேதி தமிழகம் நினைவுகூர்ந்தது. கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், இந்த நினைவு நாளுக்கான பொது நிகழ்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அதே சமயம், சமூக வலைத்தளங்களில் அந்தப் போராட்ட நினைவுகள் அதிகமாக பகிரப்பட்டன. இன்னொரு பக்கம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் வேதாந்தா நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் […]

மேலும் படிக்க . . .

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் போராட்டங்கள் !

உலகையே கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தையும் சீனாவையும் மிரட்டிக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபொலிஸ் நகரில் ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்று கதறிய ஜார்ஜ் பெர்ரி ப்ளாயிட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் குரல் அமெரிக்காவையே புரட்டிப்போட்டது. போராட்டக்காரர்களுக்கு பயந்து வெள்ளைமாளிகையின் பதுங்கு குழிக்குள் போய் ஒளிந்துகொண்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன நடக்கிறது அமெரிக்காவில்… உலகில் தனிநபர் சுதந்திரம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என கருதப்படும் […]

மேலும் படிக்க . . .