அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா ?

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுகவின் இந்த ஆட்சிக்காலம் ஒருவழியாக முடிவிற்கு வரவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த ஆட்சி, 2016-ல் ஜெயலலிதாவை முதல்வராக முன்னிறுத்தி கிடைத்த வெற்றியில் அமைந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் பல களேபரங்கள், காட்சி மாற்றங்கள். தமிழகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில், எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்துவைத்து,  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஓபிஎஸ் […]

மேலும் படிக்க . . .

‘உண்மை பேசுவதால் அரசியல் வாழ்க்கை அழிந்தாலும் கவலையில்லை’ – ராகுல் காந்தி

இந்திய ஊடகங்கள் ஒரே பக்கமாக சாய்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அரசு செய்திகளும், ஆளும் கட்சி செய்திகளும் இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்துவிட்டன. எதிர்க்கட்சிகளின் செய்திகள் ஓரங்கட்டப்படுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுள்ளது. இருந்தபோதும், அரசின் செயல்பாடுகள் மீது, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் அவசியமானது. அதுதான் ஜனநாயகம். அதை வெளியிடுவதுதான் ஊடக தர்மம். ஊடகங்களின் இத்தகைய நேர்மைக் குறைவால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, தனது உரையாடலை தனிப்பட்ட முறையில் வீடியோவாக வெளியிடுகிறார். அதை செய்தியாக […]

மேலும் படிக்க . . .

குழந்தைகளின் கல்வியில் கைவைக்கும் ஆர்எஸ்எஸ் – ராம் புனியானி

கொரோனா இந்த உலகம் முழுவதிலுமே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஆனால், சில அரசுகள் இதனை ஜனநாயக சுதந்திரத்திற்கு திரை போடுவதற்கு பயன்படுத்துகின்றன. சில நாடுகளில், இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்காவின் “இறுக்கமான” கலாச்சார சூழலையும்,  “வெளிப்படையான விவாதத்தை” வளர்த்தெடுக்க வேண்டிய மேடைகள் வேண்டும் என்றே பலவீனப்படுத்தப்படுவதையும், அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்துவரும் பிரச்சாரத்தையும் சொல்லலாம். இந்தியாவிலும்கூட, போராட்டக்காரர்கள் மற்றும் வெகுமக்கள் இயக்கங்களை மிரட்டுவது தீவிரமடைந்திருப்பதுடன் அதற்கான எதிர்வினைகளும் தோன்றத் தொடங்கியுள்ளன. ஆனால், மதவாத சக்திகள் […]

மேலும் படிக்க . . .

தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைப்பதில்தான் பிரதமர் கவனம் செலுத்துகிறார்: ராகுல் காந்தி

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் பிரதமர் தன்னுடைய சொந்த பிம்பத்தை கட்டமைப்பதில் மட்டுமே 100% கவனம் செலுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். “ஒரே ஒரு மனிதருடைய பிம்பம் என்பது தேசத்தின் தொலைநோக்கு பார்வைக்கு மாற்றாகாது. இந்தியாவின் கைப்பற்றப்பட்ட ஊடக நிறுவனங்கள் எல்லாமே இந்த வேலையைச் செய்வதில்தான் மும்முரமாக இருக்கின்றன,” என ராகுல் டிவீட் செய்திருக்கிறார். சீனா உடனான சச்சரவை இந்தியா கையாளும் விதம் குறித்தும் ராகுல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். “நீங்கள் […]

மேலும் படிக்க . . .

கோல்வால்கரின் மறைக்கப்பட்ட ஆபாசப் பேச்சுக்கள்: அ.மார்க்ஸ்

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களாக இருந்தவர்களிலேயே ஆகக் கொடூர நபர் கோல்வால்கர்தான் என நான் பலமுறை கூறியுள்ளேன். இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த அவரது கொடூர உரை ஒன்று இன்று அம்பலமாகியுள்ளது. 1960, டிசம்பர் 17 அன்று குஜராத் பல்கலைக் கழகத்தின் “சமூக அறிவியல் பள்ளியில்” உரையாற்ற இவர் அழைக்கப்பட்டிருந்தார். அதில் இந்த சாதி-இன-வருண வெறியனான கோல்வால்கர் எள்ளளவும் கவலைப்படாமல் தனது வருண-சாதி ஆபாசக் கோட்பாட்டை உமிழ்ந்தார். எதிரே உள்ளவர்கள் பச்சை இளம் குருத்துக்களான மாணவர்கள் என்பதற்காகக்கூட அவர் கவலைப்படவில்லை. இந்திய சமூகத்தில் […]

மேலும் படிக்க . . .

தேசத்துரோக சட்டம்: நிரந்தர எமர்ஜென்சி சட்டமா?

கோவிட்-19 நோய்ப்பரவலை தவறாக கையாண்ட அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னணி பத்திரிக்கையாளரான திரு.வினோத் துவாவுக்கு, கடந்த ஜூலை 7 அன்று உச்சநீதிமன்றம், கைது நடவடிக்கையில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்-ஐ தள்ளுபடி செய்யக் கோரும் திரு.துவாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதியான உதய் உமேஷ் லலித், நடந்துவரும் விசாரணை குறித்து ஒரு வாரத்திற்குள் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஹிமாச்சல […]

மேலும் படிக்க . . .

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு- விபரமும்-விசாரனையும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், வைரஸ் தாக்கியவர்களை குணப்படுத்தியதிலும் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டது மேலும், கொரோனா பொது முடக்கத்தில் இருந்து, மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டுக்கொடுத்ததில், இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் கேரளா. இத்தகைய சூழ்நிலையில், பினராய் விஜயன் தலைமையில் கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஒரு சோதனையாக வந்தது, தங்கக் கடத்தல் விவகாரம். இந்த சந்தற்பத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியான மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றத்துடித்தது பிஜேபி. ஆனால், இந்த தங்கக் […]

மேலும் படிக்க . . .

அரசுக்கு கடவுள் வழங்கிய வாய்ப்பு: கொரோனோ வைரஸ் !

ஏறக்குறைய இன்று நாம் எதிர்கொள்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் கோவிட்-19 மீதே பழி சுமத்தப்படுகிறது. நாம் இந்த வைரஸ் ஏற்படுத்திய தற்காலிகமான, உடனடிப் பிரச்சினையில்தான் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறோமே தவிர, மிகவும் ஆழமான மற்றும் மிகவும் ஆபத்தான அடுத்தடுத்த பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்துவதே இல்லை. காலம்கடந்து மெதுவாக வளர்ந்துவிடக்கூடிய பிரச்சினைகளைக் காட்டிலும், சட்டென்று தோன்றுவிடுகின்ற நெருக்கடிப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதுதான் மனித இயல்பின் அடிப்படை அம்சமாக உள்ளது. இந்தியாவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான CRISIL […]

மேலும் படிக்க . . .

ஸ்ரீராம் ! ஹே ராம் !! நேபாள் ராம் !!! ராமன் எத்தனை ராமனடி !

நேற்று முன்தினம்(14/07/2020) நேபாள பிரதமர் சர்மா ஒலி, ‘உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, ராமர் ஒரு நேபாளி’ என்றார். மேலும் அவர், ‘ராமர் பிறந்த இடமான அயோத்தி,  நேபாளத்தில் உள்ள தோரி நகரம் பீர்குஞ்ச் என்ற இடத்துக்கு மேற்குப் பகுதியில் இருக்கிறது, அவ்வாறு இருக்க, ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ளதாகக் கூறுவது எப்படி? எந்தவித தகவல்தொடர்பும் இல்லாத காலத்தில், நேபாளத்தில் உள்ள ஜனகபுரி வந்து இராமர் எப்படி சீதையை மணந்தார்?’ என்று பலவித சந்தேகங்களை எழுப்பி, […]

மேலும் படிக்க . . .

மலபார் மாப்பிள்ளைமார் விவசாய கலகம் – ஓர் நூற்றாண்டு

கேரளா கடந்த சில மாதங்களாகவே நல்ல காரணங்களுக்காகத்தான் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. கோவிட்-19 பரவலுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு மனிதநேயம், செயல்திறன் மற்றும் பயன்மிக்க நடவடிக்கைகளுடன் கேரளா தாக்குதல் நடத்தி வருகிறது. அதனுடைய வியூகங்கள் எல்லாமே மக்களுக்கு குறைவான பாதிப்புடன் நல்ல பலன்களைத் தருவதை உறுதிப்படுத்துகின்றன. பொது சுகாதாரமானது மிகவும் முறைப்படுத்தப்பட்டதாகவும், அதனுடைய சேவைகள் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும்படியாக இருப்பதும் கேரளா மாநிலத்தில்தான். மதத்தின் பெயரால் தேசியவாதத்தை திணிக்கின்ற சக்திகள் குறிப்பிடும்படியான தேர்தல் வெற்றிகள் எதையும் பெற முடியாமல் இருப்பதும் […]

மேலும் படிக்க . . .