ராகுல் காந்தி துணிவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் ! – ராஜ்மோகன் காந்தி

ராமச்சந்திர குஹா எனக்கு ஒரு சிறந்த வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் விமர்சகர் என்பதற்கும் மேலானவர். அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பர். NDTV.com-இல், எதிர்கால தேசிய அளவிலான தேர்தலில், ராகுல் காந்தியால் நரேந்திர மோடிக்கு மாற்றான காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாது என்பதற்கு “ஐந்து காரணங்களை” குறிப்பிட்டு, அவர் எழுதியுள்ள கட்டுரைக்கு கருத்து சொல்ல, இந்த நட்பே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. மோடிக்கு மாற்றான தேர்தல் வேட்பாளர் என ராகுல் காந்தியை பெரிதுபடுத்திக் காட்டுகின்ற கண்ணோட்டத்திற்கு […]

மேலும் படிக்க . . .

நிகழ்காலத்தில் எதிரொலிக்கும் அண்ணாவின் குரல் !

‘சி.என்.அண்ணாதுரை என்கிற நான், திராவிட மண்ணில் இருந்து வந்திருக்கிறேன்’ – இது அண்ணாவின் பாராளுமன்ற முதல் உரையின் முதல் வரி. அண்ணாவின் உரையைக் கேட்டிருக்கக் கூடியவர்கள், அண்ணா என்ற பெயரைப் பார்த்ததும், அவர் குரல் மனதிற்குள் ஒலிப்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு அண்ணாவையும் அவர் பேச்சையும் பிரிக்க முடியாது. அவர் தமிழகம் எங்கும் பேசியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் வரை சென்று பேசியிருக்கிறார். அண்ணா தனது சிந்தனைகளை நிறையவே எழுதியிருந்தாலும், அவரது மேடைப் பேச்சு […]

மேலும் படிக்க . . .

பேஸ்புக் தன் வியாபாரத்திற்காக இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது – ராணா அயூப்

ஆகஸ்ட் 14 அன்று, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு-நிரம்பிய தேசியவாதத்திற்கு உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பேஸ்புக்கிற்கு உள்ள பங்கு குறித்து குற்றம்சாட்டும்படியான ஒரு கட்டுரையை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிப்பித்தது. தவறான தகவல்களை வெளியிடுதல், மிரட்டல்கள், மதவெறி மற்றும் துன்புறுத்தல் ஆகியவை இந்த சமூக வலைதளத்தில் எந்தளவுக்கு பெருகிப் போகியிருக்கின்றன என்பதை, மிக நெருக்கமாக சென்று ஆவணப்படுத்தி வந்த பல செயல்பாட்டாளர்களுக்கும், இந்தக் கட்டுரை மிகவும் தேவைப்பட்ட ஒரு விவாதத்தை பற்றவைத்துவிட்டது.   இந்த வெளிப்படையான அறிக்கையில், இந்தியாவில் […]

மேலும் படிக்க . . .

விநாயகர் ஊர்வல தடை – பிஜேபிக்கு எடப்பாடி வைத்த செக் !

விநாயகர் சதுர்த்தி முடிந்து சில நாட்கள் கடந்துவிட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டை முன்னிட்டு, எடப்பாடி அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்துவிட்டதால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அமைதியாக கடந்து சென்றுவிட்டது. கடந்த ஆண்டுகளில் இதே விநாயகர் சதூர்த்தி மூன்று நாட்களுக்கு தமிழகத்தை பரபரப்பாக்கிவிடும். தமிழக காவல்துறைக்கு மூன்று நாட்களும் விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பளிப்பதே வேலையாக இருக்கும். கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்தே இந்துத்துவ அரசியல் வளர்க்கப்பட்டு வருகிறது. 90-களில் மாநகரங்களில் […]

மேலும் படிக்க . . .
மோடி-ஓபிஎஸ்-எடப்பாடி

மீண்டும் உடைகிறது அதிமுக ! பிஜேபியின் அரசியல் சூதாட்டம்!

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வர, இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை எழுந்துவிட்டது. ஏற்கனவே, கட்சிக்குள் இரட்டைத் தலைமைப் பற்றிய சலசலப்பு இருந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பிரச்சனை தானாக எழுந்ததாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னால் பிஜேபியின் அரசியல் சூதாட்டம் இருப்பதாக தோன்றுகிறது. சமீபத்திய சுதந்திர தின அரசு விளம்பரங்களில்கூட துணை முதல்வர் ஓபிஎஸின் படத்தைக் காணமுடியவில்லை. கொரோனா தொற்று சந்தேகத்தால் ஓபிஎஸ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதில் இருந்து அதிமுகவினர் […]

மேலும் படிக்க . . .

பிரசாந்த் பூஷண் அவமதிப்பு வழக்கு- பயத்திற்கு பதில் சீற்றத்தின் எதிர்வினைகள்!

“நான் மன்னிப்புக் கோர விரும்பவில்லை. எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் செய்தது தவறு என்று கருதினால் உச்சநிதீமன்றம் வழங்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.”- பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரண்டு ட்வீட்களுக்காக, அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளியாக, உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பயத்தையும். குறிப்பாக வழக்கறிஞர்களிடம் பயம் கலந்த மௌனத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டதற்கு மாறாக, சீற்றத்தின் வெடிப்பை […]

மேலும் படிக்க . . .

பரசுராம் சிலை வைக்கும் முன் ஜோதிபா புலேவை படியுங்கள் – திலீப் மண்டல்

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டினுடைய திட்டப்படி எல்லாம் நடக்கும் என்றால், நாம் குறைந்தபட்சம் இரண்டு பிரம்மாண்டமான பரசுராம் சிலையையாவது பார்க்க வேண்டியிருக்கலாம். இரண்டு கட்சிகளுமே சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலேயை சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், பரசுராமை ‘ஒழுக்கமற்றவன்’ ‘கிறுக்கன்’ மற்றும் ‘இதயமில்லாதவன்’ என்று அழைத்த புலேவை நினைவுகூர்வது இப்போது முன்னெப்போதையும் காட்டிலும் அதிகம் தொடர்புள்ளதாக தெரிகிறது. கடந்த வாரம், 108 அடி உயரமுள்ள பரசுராம் சிலையும், அதை நிர்வகிக்க ஒரு தனியார் […]

மேலும் படிக்க . . .

கேரவன் அறிக்கை: டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் மீது இந்துத்துவா பாலியல் தாக்குதல் !

கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிற்பொழுதில் தி கேரவன் பத்திரிக்கையைச் சேர்ந்த மூன்று பத்திரிக்கையாளர்கள் – ஷாகித் தாந்த்ரே, பிரப்ஜித் சிங் மற்றும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் – நாட்டின் தலைநகரத்தில் செய்தி சேகரிக்கும்போது கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். வடகிழக்கு டெல்லியில் உள்ள சுபாஷ் மொஹல்லாவில் இந்த மூன்றுபேர் மீதும் ஒரு கூட்டம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து புகார்கள் அளித்திருந்தவர் பற்றி அந்தப் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்துக் […]

மேலும் படிக்க . . .

பெங்களூரு கலவரம்-இந்துத்துவ வலைதளப் போரால் வெடித்த வன்முறை !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமீபத்தில் நடந்த கலவரத்தின்போது போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு மற்றும் அவரது தங்கையின் வீடும் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் இருந்த பல வாகனங்களும் தீ வைக்கப்பட்டதுடன் ஏடிஎம் இயந்திரங்களும் அடித்து நெறுக்கப்பட்டன. 60 போலிஸார் உட்பட 140 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இந்த கலவரம் ? […]

மேலும் படிக்க . . .

ஊடகங்கள் மீதான தாக்குதல் – பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பின் கண்டனம்

ஊடகங்கள் மீதான இன்றைய தாக்குதல் குறித்த விரிவான தகவல்களைத் தரும்  ஒரு முக்கிய ஆவணம் கோவிட் 19 வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இன்று தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள்   மூன்று வழிகளில் நடைபெறுகின்றன. கோவிட்-19 பாதிப்பு மற்றும் அரசு அதைக் கையாளுதல் குறித்து தவறான செய்திகளை வெளியிடுவதாகவும், அச்சத்தை விதைப்பதாகவும் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது வழக்குகள் தொடர்வது. கோவிட்-19ஐ […]

மேலும் படிக்க . . .