காங்கிரஸின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்திதான் பொறுப்பா ? பீகாரில் இருந்து ஒரு பதில் !

காங்கிரஸின் அவலநிலைக்கு ராகுல் காந்தியைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது. காங்கிரஸின் வீழ்ச்சி 1980-களில் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி அரசியல் களத்திற்கே வராத 1990-களின் முற்பகுதியிலேயே, காங்கிரசின் வீழ்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.  பழமைவாய்ந்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸின் அவலநிலையை, பொதுவாக இந்தி பேசும் மையப்பகுதியில், அதிலும் குறிப்பாக பீகாரின் சமீபத்திய வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்தால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 முக்கியத் […]

மேலும் படிக்க . . .

கருவாடு மீன் ஆகுமா ? சசிகலா ஆடியோவும் அதிமுக அரசியலும்

சமீபத்தில், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக அழிவதை பார்த்து சசிகலா வருந்துவதாகவும், அதிமுகவை காப்பாற்ற தான் அரசியலுக்கு விரைவில் வரயிருப்பதாகவும் அந்த ஆடியோ பேச்சுகளின் மையக்கருத்து உள்ளது. சசிகலாவை விலக்கிவைத்து விட்டு, அதிமுகவை சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு, இந்த ஆடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுதியிருக்கிறது. அவர்களில் சிலர் இந்த ஆடியோக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து, இந்த விவகாரத்தை […]

மேலும் படிக்க . . .

சர்ச்சைக்குரிய நீதிபதி அருண் மிஸ்ரா- மனித உரிமை ஆணைய புதிய தலைவர்

மோடியைப் புகழ்ந்த சர்ச்சைக்குரிய நீதிபதி இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலைவர்  ஆகியுள்ளர். நீதிபதி அருண் மிஸ்ரா 2020-இல் உச்சநீதிமன்றத்தில் பதவியில் இருந்தபோது, ஒரு சர்வதேச மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை, ‘இந்தியாவிற்குள் செயல்பட்டாலும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற, உலகளவிய சிந்தனைக் கொண்ட தொலைநோக்கு பார்வையாளர்’, என்று புகழ்ந்தவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ராவை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்த, 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவில், எதிர்க்கட்சி […]

மேலும் படிக்க . . .

ஏழுவர் விடுதலை விவகாரம் கடந்து வந்த பாதை…

தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் வாழம் 7 பேரை விடுதலைச் செய்வதற்கு, சட்டபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். அதை தொடர்ந்து தமிழக அரசும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த 7 […]

மேலும் படிக்க . . .