நாகப்பட்டினம் – வெற்றி வாய்ப்பு நிலவரம்

HOME

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம்

.நாகப்பட்டிணம் (தனி) நாடாளுமன்ற தொகுதி

2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:-

அதிமுக-                     தங்க. கதிரவன்

விசிக-திமுக கூட்டணி- ஆளூர் ஷா நவாஸ்

அமமுக –               ஆர்.சி.எம். மஞ்சுளா

மநீம-                       அனஸ்

நாம் தமிழர்-         எஸ்.அகஸ்டின் அற்புதராஜ்

………………………………………………………….

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:-

அதிமுக கூட்டணி- 64903

திமுக கூட்டணி-   44353

ம.நலக் கூட்டணி-  11088

பிஜேபி கூட்டணி-   6005

பாமக-             1036

நாம் தமிழர்-       1557

…………………………………………………………………

2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு விபரம்:-

திமுக கூட்டணி-இ.கம்யூனிஸ்ட்- செல்வராஜ்-   70,086

அதிமுக- சரவணன்-                           42,381

அமமுக- செங்கொடி-                          8,410

நாம் தமிழர்- மாலதி-                          6,690

மநீம- குருவை-                               3,396

அதிமுகவை விட திமுக கூட்டணி  வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

………………………………………………….

இது கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெற்றிப் பெற்ற தொகுதி.

இப்போது இங்கு அதிமுகவிற்கும் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே போட்டி.

இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக தலித் மக்கள் உள்ளனர்,அடுத்ததாக மீனவர்களும் முக்குலத்தோரும் வாழகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இங்கு மூன்று கூட்டணி சார்பாக மூன்று முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முஸ்லீம் வாக்குகள் மூன்றாக பிரிந்தன.

இந்த தேர்தலில் முஸ்லீம் வேட்பாளராக விசிகவின் ஆளூர் ஷா நவாஸும் மநீம வேட்பாளராக அனஸும் களத்தில் உள்ளனர். மநீமவால் முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க முடியாது. ஷா நவாஸ் விசிக வேட்பாளர் என்பதால் தலித் மக்களின் வாக்குகளையும் பெறுகிறார்.

இங்கு குறிப்பிட்ட அளவு அமமுக-தேமுதிக கூட்டணி அதிமுக வாக்குகளைப் பிரிக்கும்.

ஆக, இங்கு விசிக வெற்றி !

  • சதுரங்கம் மாஸ் சைகாலஜி டீம்