போடிநாயக்கனூர் – வெற்றி வாய்ப்பு நிலவரம்

HOME

போடிநாயக்கனூர்

தேனி மாவட்டம்

தேனி நாடாளுமன்ற தொகுதி

2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:-

அதிமுக-              ஓ. பன்னீர்செல்வம்

திமுக-          தங்க தமிழ்ச்செல்வன்

அமமுக-        எம். முத்துசாமி

மநீம-           கணேஷ் குமார்

நாம் தமிழர்-       பிரேம்சந்தர்

…………………………………………………………………..

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:-

அதிமுக கூட்டணி- 99531

திமுக கூட்டணி-  83923

ம.நலக் கூட்டணி-  6889

பிஜேபி கூட்டணி-     3250

பாமக-             405

நாம் தமிழர்-       1324

…………………………………………………………………

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த எம்பி தொகுதிக்கு உட்பட்ட  ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதியிலும் கூட்டணிகள் பெற்ற சராசரி வாக்குகள் விபரம்:-

அதிமுக-     84,100

திமுக-          71,300

அமமுக-          24,000

மநீம-                  2,800

நாம் தமிழர்- 4,600

………………………………………………………………………………………..

இது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதி. இங்கு தொடர்ந்து வெற்றிப் பெற்றுவரும் இவர், இந்த முறை இங்கு அவ்வளவு எளிதில் வெல்லமுடியாது.

கடந்த எம்பி தேர்தலில் இங்கு அதிமுக சுமார் 20 ஆயிரம் கூடுதலாகப் பெற்றுள்ளது.

எம்பி தேர்தலில் இங்கு அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன்  இம்முறை திமுக வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.

அமமுக-தேமுதிக கூட்டணியும் இங்கு போட்டியை கடுமையாக்கியுள்ளது.

முக்குலத்தோர் மற்றும் நாயுடுகள் இந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மை சாதிகள். இந்த சாதிய வாக்குவங்கி இம்முறை மூன்றாக பிரிகிறது.

கடந்த எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி இப்போது தனித்துப் போட்டியிடுகிறது. அது மிக குறைந்த வாக்குகளைப் பிரித்தாலும், அது அதிமுகவைப் பாதிக்கும்.

அமமுக-தேமுதிக பிரிக்கும் வாக்குகளும் அதிமுகவைப் பாதிக்கும்.

எனவே, ஓபிஎஸ் இங்கு கடுமையான போட்டியை சந்திக்கிறார்.

இருந்தபோதும், இங்கு அதிமுக வெற்றி !

  • சதுரங்கம் மாஸ் சைகாலஜி டீம்