பூந்தமல்லி (தனி) வெற்றி யார் பக்கம்!

2019 தேர்தல் HOME

பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவை தொகுதி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.

2019 இடைத்தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்:

அதிமுக வைத்தியநாதன்
திமுக   கிருஷ்ணசாமி
அமமுக ஏழுமலை

கடந்தகால தேர்தல்களின் வாக்குவிவரம்:

2014 எம்பி தேர்தல்:

அதிமுக 1,09,435
திமுக 53,360
பிஜேபி, பாமக, தேமுதிக, மதிமுக கூட்டணி 31,597
காங்கிரஸ் 8,753

2016 எம்எல்ஏ தேர்தல்:

அதிமுக 1,03,952
திமுக – காங்கிரஸ் கூட்டணி 92,189
மதிமுக, தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கூட்டணி 15,051
பாமக 15,827
பிஜேபி 3,436
 • இந்த தொகுதியில் 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் ஏழுமலை தினகரனை ஆதரித்ததால் தகுதி இழப்பு செய்யப்பட்டார். இப்போது அதே ஏழுமலை அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 • 2014 எம்பி தேர்தலைவிட 2016 எம்எல்ஏ தேர்தலில் அதிமுக 5,483 வாக்குகள் மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், திமுக 38,829 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
 • தனித்துப் போட்டியிட்டு 2016 எம்எல்ஏ தேர்தலில் 15,827 வாக்குகள் பெற்றுள்ள பாமக இப்போது அதிமுக கூட்டணியில் உள்ளது.
 • 2016 எம்எல்ஏ தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி 15,051 வாக்குகள் பெற்றது. இதில் தேமுதிக மட்டுமே அதிமுக கூட்டணியில் உள்ளது.
 • இந்த தொகுதியில் வன்னியர்களும், தலித் மக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். மற்ற அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழ்கிறார்கள். இங்கு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் உள்ளனர்.
 • கடந்த எம்பி தேர்தலில் பிஜேபியும் பாமகவும் கூட்டணியாக இருந்தன. அப்போது பிஜேபிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளில் ஒரு பகுதி அதிமுகவுக்கு கிடைத்தது.
 • அதுபோல, பாமகவுக்கு எதிரான தலித் மக்களின் வாக்குகளில் ஒரு பகுதியும் அதிமுகவுக்கு கிடைத்தது.
 • இந்த தேர்தலில் பிஜேபியும் பாமகவும் அதிமுக கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகளை அதிமுக இழக்கும். அதை சரிகட்ட பாமகவின் வாக்குகளை அதிமுக நம்பியுள்ளது.
 • விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக கூட்டணியில் உள்ளதால் தலித் மக்களின் வாக்குகளை கூடுதலாக பெறும். மேலும், சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெறும்.
 • இப்படி வாக்குகள் எதிரெதிராக மாறுவதால் அதிமுகவும் திமுகவும் சமபலம் பெறலாம்.
 • ஆனால், அமமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிப்பதன் மூலம் திமுக லாபம் பெறும்.
 • ஆகமொத்தம், திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது.
 • சதுரங்கம் மாஸ் சைக்காலஜி டீம்.

*முடிவுகள் தேர்தல் அபாயத்திற்கு உட்பட்டவை.

                                                      ———————————–