திருப்போரூர் வெற்றி யார் பக்கம்!

2019 தேர்தல் HOME

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மக்களைத் தொகுதிக்குள் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளது.

2019 இடைத்தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்:

அதிமுக ஆறுமுகம்
திமுக   காத்தவராயன்
அமமுக கோதண்டபாணி

கடந்தகால தேர்தல்களின் வாக்குவிவரம்:

2014 எம்பி தேர்தல்:

அதிமுக 79,031
திமுக 51,175
பிஜேபி, பாமக கூட்டணியில் மதிமுக 44,396
காங்கிரஸ் 5,389

2016 எம்எல்ஏ தேர்தல்:

அதிமுக 70,215
திமுக 69,265
பாமக 28,125
மக்கள் நல கூட்டணி 25,539
பிஜேபி 2,805
  • 2016 எம்எல்ஏ தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ கோதண்டபாணி, தினகரனை ஆதரித்ததால் பதவி இழந்தார். அவர் இப்போது இங்கு அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
  • இந்த தொகுதியில் வன்னியர்களும் தலித் மக்களும் அதிகமாக உள்ளனர். மற்ற அனைத்து சமூகத்தினரும் கலந்து வாழ்கிறார்கள். முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் பரவலாக உள்ளனர்.
  • 2014 எம்பி தேர்தலைவிட 2016 எம்எல்ஏ தேர்தலில் அதிமுக 8,814 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனால், திமுக 18,090 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
  • இங்கு பாமகவுக்கு வாக்குவங்கி உள்ளது. அதுபோல மதிமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வாக்குவங்கி உள்ளது.
  • பாமக கூட்டணியால் அதிமுக லாபம் பெறும்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதிமுகவும் திமுக உடன் கூட்டணியில் இருப்பது திமுகவுக்கு லாபம்.
  • கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற தலித் மக்கள் வாக்குகளையும் சிறுபான்மையினர் வாக்குகளையும் இந்தமுறை அதிமுக இழக்கும்.
  • எதிரெதிராக திரும்பும் வாக்குகளால் அதிமுகவும் திமுகவும் சமபலம் பெற்றாலும், அமமுக 10 சதவிகிதம் அதிமுகவின் வாக்குகளை பிரித்தாலும் அது அதிமுகவை பாதிக்கும்.
  • ஆகமொத்தம், இங்கு திமுக வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
  • சதுரங்கம் மாஸ் சைக்காலஜி டீம்.

*முடிவுகள் தேர்தல் அபாயத்திற்கு உட்பட்டவை.

                                                      ———————————–