அரசுக்கு கடவுள் வழங்கிய வாய்ப்பு: கொரோனோ வைரஸ் !

ஏறக்குறைய இன்று நாம் எதிர்கொள்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் கோவிட்-19 மீதே பழி சுமத்தப்படுகிறது. நாம் இந்த வைரஸ் ஏற்படுத்திய தற்காலிகமான, உடனடிப் பிரச்சினையில்தான் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறோமே தவிர, மிகவும் ஆழமான மற்றும் மிகவும் ஆபத்தான அடுத்தடுத்த பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்துவதே இல்லை. காலம்கடந்து மெதுவாக வளர்ந்துவிடக்கூடிய பிரச்சினைகளைக் காட்டிலும், சட்டென்று தோன்றுவிடுகின்ற நெருக்கடிப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதுதான் மனித இயல்பின் அடிப்படை அம்சமாக உள்ளது. இந்தியாவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான CRISIL […]

மேலும் படிக்க . . .

ஸ்ரீராம் ! ஹே ராம் !! நேபாள் ராம் !!! ராமன் எத்தனை ராமனடி !

நேற்று முன்தினம்(14/07/2020) நேபாள பிரதமர் சர்மா ஒலி, ‘உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, ராமர் ஒரு நேபாளி’ என்றார். மேலும் அவர், ‘ராமர் பிறந்த இடமான அயோத்தி,  நேபாளத்தில் உள்ள தோரி நகரம் பீர்குஞ்ச் என்ற இடத்துக்கு மேற்குப் பகுதியில் இருக்கிறது, அவ்வாறு இருக்க, ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ளதாகக் கூறுவது எப்படி? எந்தவித தகவல்தொடர்பும் இல்லாத காலத்தில், நேபாளத்தில் உள்ள ஜனகபுரி வந்து இராமர் எப்படி சீதையை மணந்தார்?’ என்று பலவித சந்தேகங்களை எழுப்பி, […]

மேலும் படிக்க . . .

மலபார் மாப்பிள்ளைமார் விவசாய கலகம் – ஓர் நூற்றாண்டு

கேரளா கடந்த சில மாதங்களாகவே நல்ல காரணங்களுக்காகத்தான் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. கோவிட்-19 பரவலுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு மனிதநேயம், செயல்திறன் மற்றும் பயன்மிக்க நடவடிக்கைகளுடன் கேரளா தாக்குதல் நடத்தி வருகிறது. அதனுடைய வியூகங்கள் எல்லாமே மக்களுக்கு குறைவான பாதிப்புடன் நல்ல பலன்களைத் தருவதை உறுதிப்படுத்துகின்றன. பொது சுகாதாரமானது மிகவும் முறைப்படுத்தப்பட்டதாகவும், அதனுடைய சேவைகள் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும்படியாக இருப்பதும் கேரளா மாநிலத்தில்தான். மதத்தின் பெயரால் தேசியவாதத்தை திணிக்கின்ற சக்திகள் குறிப்பிடும்படியான தேர்தல் வெற்றிகள் எதையும் பெற முடியாமல் இருப்பதும் […]

மேலும் படிக்க . . .

அதிகாரம் யாருக்கு? பாகம்-2 – சர்க்காரின் வேலைகள்– புதுமைப்பித்தன்

சர்க்காரின் வேலை என்ன?  இவற்றைப் பொதுப்படையாக மூன்று கூறாகப் பிரிக்கலாம். சட்டம் இயற்றுதல், இயற்றிய சட்டத்தை நடத்தி வைத்தல், சட்ட நிர்வாகத்திலே தோன்றக்கூடிய கலக்கங்களை தெளிவுபடுத்துதல். சர்க்காரும் தெய்வத்தைப்போல முத்தொழில் இயற்றும் ரூப அமைப்புதான். சங்காரம் என்ற மூன்றாவது அமிசம் எதிர்மறையாகக் கிடக்கிறது என்றும் சொல்ல வேண்டும். நிற்க, சட்டங்களை இயற்றும் ஸ்தாபனத்தை சட்டசபை எனவும் சட்ட நிரூபண மன்றம் என்றும் சொல்லுவார்கள். அசெம்பிளி, கவுன்ஸில் என்பது தெரிந்த பதங்கள். அவற்றை உபயோகிப்பதனால் பாதகம் இல்லை. சட்டம் […]

மேலும் படிக்க . . .

கொரோனா தடுப்பூசி – எழுப்பும் சந்தேகங்கள் !

கொரோனா பெருந்தொற்றில் உலக நிறுவனங்கள் எல்லாம் உற்பத்தியை நிறுத்தி வேலைகளை குறைத்த போது சில நிறுவனங்கள் மட்டும் ராக்கெட் வேகத்தில் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் முடுக்கி விட்டிருந்தன. எந்த அளவுக்கு என்றால் கொரோனா வைரஸின் மரபணு வரிசைமுறையை சீனா வெளியிட்ட மூன்றே மணி நேரத்தில், அதற்கான mRNA தடுப்பு மருந்திற்கான மரபணு வரிசையை அவை கண்டுபிடித்துவிட்டன. மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உண்மையிலேயே ரக்கெட் வேகத்தில் இயங்கிக்கொண்டுள்ளன. இப்போதைய முக்கியமான கேள்வி கொரோனா […]

மேலும் படிக்க . . .

ராம் மனோகர் லோகியா- ஒரு சோசலிச காந்தியவாதி !

ராம் மனோகர் லோகியா ஒரு சோசலிச சிந்தனை கொண்ட காந்தியவாதி. முதல் பார்வைக்கு இது முரண்பட்ட கருத்தாக தோன்றினாலும், அதுதான் அவரது ஆளுமையின் வடிவம். லோகியா ஜெர்மனியில் படித்தபோதே, காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை அடிப்படையாக வைத்து, காந்தியின் பொருளாதார சிந்தனைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவிற்கு வந்ததும், காங்கிரஸில் இணைந்து சைமன் கமிஷன் வருகைக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூரில், காங்கிரஸ் தலைவர் ஹிராலாலுக்கும் ஆசிரியை சாந்தாவுக்கும், 1910-ஆம் ஆணடு […]

மேலும் படிக்க . . .

மக்களை முட்டாள்களாக்க – தொடரும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் !

ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்படுகிறது. அதை சி-வோட்டர் என்னும் நிறுவனம் செவ்வனே செய்துவருகிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மட்டும், சி-வோட்டர் நிறுவனம் மூன்று முறை, மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த மே மாதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், உலக தலைவர்களிலேயே மோடி முன்னிலை வகிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு நேரெதிராக, உலகிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]

மேலும் படிக்க . . .

மாஜிஸ்ட்ரேட் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் – நீதிபதி கே.சந்துரு

“நீதித்துறை ஒழுங்கின்மை, கைது நடவடிக்கைக்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் வழக்கை தவறாக வழிநடத்தியிருப்பது” ஆகியவற்றிற்காக, சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் பி.சரவணன் பதவீ நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் இம்மானுவல் பென்னிக்ஸ் ஆகியோர், காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளை ஏளனம் செய்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார். “காவல்துறை தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதும், மாஜிஸ்ட்ரேட் கூட கைது செய்வதற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை […]

மேலும் படிக்க . . .

அதிகாரம் யாருக்கு? – புதுமைப்பித்தன்

பாகம் – 1 முகப்புச்சாவி இது அரசியல் சாசனத்தின் சகல அம்சங்களையும் பரிபூரணமாக விவாதிக்கும் புஸ்தகம் அல்ல. இதில் விடப்பட்ட விஷயங்கள் பல. சொல்லப்பட்டவற்றில், பாஷை தெளிவே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியே இது. சாத்தியமானவரை எதிர்மறை ரூபத்தின் சூத்திரபூர்வமாக லட்சண வரம்புகளை விவரித்துக் கொண்டு போவதே நோக்கம். அரசியல் கட்டுக்கோப்பு சோதனையில் லட்சியப் பேச்சுக்கு இடம் இல்லை. கருணை என்ற வார்த்தையின் பொருள் இப்பொழுது கிழங்கு வர்க்கத்தில் அடங்கிவிட்டது. அரசியல் மண்ணில் அது முளைக்காவிட்டால் […]

மேலும் படிக்க . . .

சாத்தான்குளம் இரட்டைக் கொலை! தமிழகக் காவல்துறை கலைக்கப்பட வேண்டும்! -தோழர்.தியாகு

அரசே! நீதிமன்றமே! கொலைகாரர்களைச் சிறையிலடைத்துக் கொலைவழக்குப் போடாதது ஏன்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்.  கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மக்கள்-ஊரடங்கு என்று தொடங்கி முழு முடக்கம் ஆட்சி செய்யத் தொடங்கியது முதலே காவல்துறையின் காட்டாட்சி தொடங்கி விட்டது. நடந்தோ இருசக்கர ஊர்தியிலோ […]

மேலும் படிக்க . . .